முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரகடத்தில் ரூ.2,858 கோடியில் உலகளாவிய மையம்: சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு செயிண்ட் கோபைன் விண்ணப்பம்

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024      தமிழகம்
CM-1 2024-11-02

சென்னை, ஒரகடம் பகுதியில் ரூ.2,858 கோடி மதிப்பில் உலகளாவிய மையம் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செயிண்ட் கோபைன் நிறுவனம், தமிழகத்தில் திருப்பெரும்புதூர், பெருந்துறை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நிறுவி, ரூ.5,000 கோடி வரையில் முதலீடு செய்துள்ளது. இதன்மூலம், 5,000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

சென்னை ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.2,858 கோடி செலவில், 127 ஏக்கர் பரப்பளவில் தொழில் நிறுவனத்தை செயிண்ட் கோபைன் நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்திற்கு கடந்த ஆக., மாதம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தார். இந்த நிலையில், இந்த தொழில் மையம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்த தொழில் மையம் அமையும் பட்சத்தில் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து