முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி வந்தவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பா..? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024      தமிழகம்
Ma Supramanian 2024-08-21

Source: provided

சென்னை : சார்ஜாவில் இருந்து திருச்சி வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பா? என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். மாதிரிகள் மறு ஆய்வுக்காக மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த நபருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் உடலில் சில கொப்பளங்கள் இருந்ததால், பரிசோதனைக்காக அவரது உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவுகளில், சம்பந்தப்பட்ட நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், அவருக்கு சின்னம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, மறு ஆய்வுக்காக மாதிரிகள் தற்போது புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாளைய தினம் முடிவுகள் தெரியவந்துவிடும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து