முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம்: சென்னையில் 7-ம் தேதி புதிய தமிழகம் கட்சியினர் பேரணி

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      தமிழகம்
Krishnaswamy 2024-03-05

Source: provided

சென்னை : அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் புதிய தமிழகம் கட்சி வருகிற 7-ம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பிரமாண்ட பேரணியை நடத்துகிறது என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் பட்டியல் பிரிவில் மிகப்பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர்களுக்கும்,  வடக்கு மாவட்டங்களில் ஆதிதிராவிடர் சமுதாயத்திற்கும் பெரும் பாதிப்பை உருவாக்கும் வகையில் எண்ணிக்கையில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ள அருந்ததியர்களுக்கு ஒட்டுமொத்த 18 சதவீதத்தையும் தாரைவாக்கும் வகையில் முன்னுரிமை தந்து 3 சதவீத உள் இடஒதுக்கீடு அரசாணை பிறப்பித்து கடந்த 15 வருடமாக அதை நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள்.

அதன் விளைவாக தமிழகத்தின்  ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15 சதவீதத்திற்கும் மேல் உள்ள இரு சமூக இளைஞர்களும் வேலைவாய்ப்பின்றி, நிர்க்கதியாக உள்ளார்கள். எனவே, தேவேந்திர குல வேளாளர்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் இழைக்கப்படும் அநீதிக்கு முடிவு கட்டிட 3 சதவீத அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி சென்னையில் புதிய தமிழகம் கட்சி வருகிற 7-ம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பிரமாண்ட பேரணியை நடத்துகிறது.

அப்பேரணியில் அனைத்து தரப்பினரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து