முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ரெயில்வே நிர்வாகத்திற்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      தமிழகம்
OPS-1 2023 04 24

Source: provided

சென்னை: இனி வருங்காலங்களில், ரயில் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் கேரள மாநிலம், சோரனூர் ரெயில் நிலையம் அருகே, பாரதப்புழா ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில், ரெயில் வரும் நேரம் அறியாமல், ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியினை மேற்கொண்டிருந்தபோது, டில்லி-திருவனந்தபுரம் விரைவு ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியறிந்து ஆற்றொணத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகை வழங்குவது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கிட வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இனி வருங்காலங்களில், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து