முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவின் தாக்குதலில் ஒரே நாளில் உக்ரைன் வீரர்கள் 150 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      உலகம்
Ukraine 2024-11-04

Source: provided

மாஸ்கோ : குர்ஷ்க் மாகாணத்தில் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 150 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. 

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நேற்று 983-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. 

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிட வில்லை. 

அதேவேளை, இருநாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.இதனிடையே, ரஷ்யாவின் குர்ஷ்க் மாகாணத்திற்குள் உக்ரைன் வீரர்கள் நுழைந்துள்ளனர். அவர்களை குர்ஷ்க் மாகாணத்தில் இருந்து வெளியேற்றி நகரை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படையினர் போரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குர்ஷ்க் மாகாணத்தில் நடத்திய தாக்குதல் நேற்று முன்தினம் ஒரே நாளில் 150 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவ வாகனங்களும் அழிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து