முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 21,000 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 கோடி தமிழ்நாடு அரசு கடனுதவி

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : கடந்த 3 ஆண்டுகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக கொண்ட 21 ஆயிரம் சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14.64 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இயங்கி வரும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்களின் கீழ் தமிழகம் முழுவதும் 4.73 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஊரக பகுதியில் 3.29 லட்சம் சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புற பகுதியில் 1.44 லட்சம் சுய உதவிக் குழுக்களும் செயல்பாட்டில் உள்ளன.

இவற்றில் மொத்தம் 54 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சுய உதவிக் குழுக்களுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.35 ஆயிரம் கோடி வங்கி கடன் இணைப்பு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதில் ரூ.18,066 கோடி கடனுதவி 2.69 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2011 முதல் 75,762 சிறப்பு சுய உதவிக் குழுக்களும் தனியாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர்.

குறிப்பாக, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 21,504 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டு, ரூ.14.64 கோடி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து