முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாரணர் இயக்கத்தின் நிறுவன நாள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி, இலச்சினை வெளியிட்டார்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      தமிழகம்
Udayanidhi 2024-11-07

தஞ்சாவூர், சாரண, சாரணியர் இயக்கத்தின் 75-வது நிறுவன நாளையொட்டி கொடி மற்றும் இலச்சினை தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பாக 75-வது நிறுவன நாள் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்புப் பெருந்திரளணியின் தலைவராக, துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். 

மேலும் சாரண, சாரணியர் இயக்கத்தின் 75-வது நிறுவன நாள் கொடி, சிறப்புப் பெருந்திரளணியின் முதல் அறிவிப்பு இதழ் மற்றும்  இலச்சினை ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து