முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் செம்மொழித் தமிழ் விருது: முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      தமிழகம்
CM-3 2024-11-08

சென்னை,  2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கி சிறப்பித்தார். 

 சென்னை தலைமைச் செயலகத்தில், 2024-ம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசனுக்கு கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுடன் ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர்  திருவுருவச்சிலையையும் வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பித்தார்.

 தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள அறிஞர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 

2024-ம் ஆண்டுக்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக விளங்கும் முதல்வரால்  அமைக்கப்பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946-ல் பிறந்த முனைவர் மா.செல்வராசன் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இக்காலத் தமிழ் இலக்கியத்துறையில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து