முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமிய அமைப்பு ஆதரவுடன் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார் : கேரள முதல்வர் பினராய் விஜயன் தாக்கு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      இந்தியா
Pinarayi-Vijayan 2023 04 12

Source: provided

திருவனந்தபுரம் : வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவுடன் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வருகிற 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில், ஏற்கனவே அந்த தொகுதியில் எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். 

அவர் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை கடந்த 2-ம் தேதி தொடங்கினார். அவர் வயநாடு தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும் பல பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று பேசினார். 

பிரச்சாரத்தின் போது அவர் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். வயநாடு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தனது பிரச்சாரத்தை பிரியங்கா காந்தி நேற்று முன்தினத்துடன் முடித்துக் கொண்டார். அவருக்கு ஆதரவாக கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி இஸ்லாமிய அமைப்பின் ஆதரவுடன் போட்டியிடுகிறார் என்றும், இதன் மூலமாக காங்கிரஸ் கட்சியின் மதசார்பற்ற நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது எனவும் கேரள முதல்வர் பினராய் விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவுடன் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். எனவே மதசார்பற்ற கட்சி என்ற விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன? 

ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பை பற்றி நம் நாடு அறியாமல் இல்லை. அந்த அமைப்பின் சித்தாந்தம் ஜனநாயக கருத்துக்களுடன் ஒத்துப்போகிறதா?ஜமாத்தே இஸ்லாமிக்கு ஒரே கொள்கைதான். எந்தவிதமான ஜனநாயக ஆட்சியையும் அவர்கள் ஏற்கவில்லை. அதுதான் அவர்களின் சித்தாந்தம். 

இப்போது அவர்கள் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு உதவ விரும்புவதாகத் தெரிகிறது. மதச்சார்பின்மையின் பக்கம் நிற்பவர்கள் அனைத்துவிதமான மத வெறியையும் எதிர்க்க வேண்டாமா? ஜமாத்தே இஸ்லாமியின் ஓட்டை காங்கிரஸால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பு ஆதரவு கொடுத்திருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் மதசார் பற்ற நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது. இவ்வாறு பினராய் விஜயன் அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து