முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒருநாள் போட்டி: ஆஸி.யை வீழ்த்தி பாக். வெற்றி

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      விளையாட்டு
Pak 2024-08-21

Source: provided

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மோசமான ஆட்டம்...

பாகிஸ்தான் அணி ஆஸி.க்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் வென்ற ஆஸி. அணி 2-வது போட்டியில் மிகவும் மோசமாக விளையாடி 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் 26.3 ஓவரில் 169/1 ரன்கள் எடுத்து வென்றது. ஆஸி. சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் பேட்டர் சைம் ஆயூப் 86* ரன்கள், அப்துல்லா ஷபிக்கு 64 ரன்கள், பாபர் அசாம் 15* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்கள்.

இதுவே முதல் முறை...

பாகிஸ்தானின் வேகப் பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் 2-வது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் ஹாரிஷ் ராப். 1-1 என தொடரில் சமநிலையில் இருக்கிறது பாகிஸ்தான்-

ஆஸி. 3-வது போட்டியில் கம்மின்ஸ் உள்பட மூத்த வீரர்கள் விளையாடமாட்டார்கள் என்பதால் தொடரை வெல்ல பாகிஸ்தானுக்கு நல்லதொரு வாய்ப்பு. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து