முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகரில் பட்டாசு தொழிற்சாலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு: தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      தமிழகம்
CM-1 2024-11-09

விருதுநகர், முதல்வர் மு.க.ஸ்டாலின்  விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது  விருதுநகர், கன்னிசேரி புதூர், மேலச்சின்னையாபுரத்தில் உள்ள மதன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையை முதல்வர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர்  ஆய்வு மேற்கொண்டபோது, தொழிற்சாலை பெற்றுள்ள உரிமச் சான்றினை ஆய்வு செய்து, அங்கு பட்டாசுகள் தயாரிப்பதற்கான இரசாயனப் பொருட்கள் வைப்பறை, தயாரிக்கப்படும் இடங்கள், பட்டாசுகள் வைப்பறை, மைக்ரோ கார்டு திரி வைப்பறை போன்ற இடங்களை பார்வையிட்டு,  ஆய்வு மேற்கொண்டு, சுமார் 80 பேர் பணிபுரியும் இத்தொழிற்சாலையில், 36 பெண்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறதா என்பதை கேட்டறிந்தார். 

இப்பட்டாசு தொழிற்சாலை இதுவரையில் விபத்து ஏற்படாமல் மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட்டு வருவதை கேட்டறிந்த முதல்வர், அனைத்து தொழிற்சாலைகளிலும் பசுமையான சூழலைப் பராமரிக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

மேலும், இந்நிறுவனத்தின் உரிமையாளரிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பிற்கான முறையான காப்பீடு வசதியினை செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, தொழிலாளர்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

பின்னர், இத்தொழிற்சாலைக்கு வெளியே திரளாக கூடியிருந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் முதல்வர் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக முதல்வர், மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக விருதுநகர் செல்லும் வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பொதுமக்கள்  அளித்த கோரிக்கை மனுக்களையும் முதல்வர் பெற்றுக் கொண்டார்.

 ஆய்வின்போது, அமைச்சர்கள்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்,  தங்கம் தென்னரசு,  சி.வி. கணேசன்,  எ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர்  ஜெயசீலன்,  முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர்  கந்தசாமி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் ஆனந்த், மதன் பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் நாகராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து