முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினியுடன் நடந்த உரையாடல் குறித்து டுவிட்டரில் பதிவிட்ட கவிஞர் வைரமுத்து

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      தமிழகம்
Rajini-Vairamuthu 2024-11-0

Source: provided

சென்னை : நடிகர் ரஜினிகாந்துடன் நடந்த உரையாடல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் வேட்டையன். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது, தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து  ரஜினிகாந்தை  வீட்டில் சந்தித்துள்ளார். வைரமுத்து பல தமிழ் படங்களில் பல நடிகர்களின் படங்களில் பாடல் வரிகளை எழுதியுள்ளார். 

அதே நேரத்தில் ரஜினியின் எந்திரன் படத்தில் அரிமா அரிமா, அண்ணாமலை படத்தியில் வெற்றி நிச்சயம் போன்ற பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ரஜினிகாந்துடன் நடந்த உரையாடல் குறித்த பதிவை தனது டுவிட்டர்  தளத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார். அதில்  கடிகாரம் பாராத உரையாடல் சில பேரோடுதான் வாய்க்கும்.

அவருள் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 80 நிமிடங்கள் உரையாடியிருக்கிறோம் ஒரே ஒரு கிரீன் டீயைத் தவிர எந்த இடைஞ்சலும் இல்லை இடைவெளியும் இல்லை, சினிமாவின் அரசியல் அரசியலின் சினிமா வாழ்வியல் - சமூகவியல் கூட்டணிக் கணக்குகள் தலைவர்கள் தனிநபர்கள் என்று எல்லாத் தலைப்புகளும் எங்கள் உரையாடலில் ஊடாடி ஓய்ந்த எதுகுறித்தும் அவருக்கொரு தெளிவிருக்கிறது. தன்முடிவின் மீது உரசிப் பார்த்து உண்மை காணும் குணம் இருக்கிறது.

நான் அவருக்குச் சொன்ன பதில்களை விட அவர் கேட்ட கேள்விகள் மதிப்புமிக்கவை. தவத்திற்கு ஒருவர், தர்க்கத்திற்கு இருவர் நாங்கள் தர்க்கத்தையே தவமாக்கிக் கொண்டோம். ஒரு காதலியைப் பிரிவதுபோல் விடைகொண்டு வந்தேன்.  இரு தரப்புக்கும் அறிவும் சுவையும் தருவதே ஆரோக்கியமான சந்திப்பு அது இது என ரஜினியுடன் நடந்த உரையாடலையும் அவருடன் எடுத்த புகைப்படத்தையும் டுவிட்டரில் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து