முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றின் தரம் மோசம்: அடர்ந்த மூடுபனி நிலவியதால் டெல்லியில் விமான சேவைகள் பாதிப்பு

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      இந்தியா
Delhi 2024-10-28

Source: provided

புதுடெல்லி : டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை அடர்ந்த மூடுபனி சூழ்ந்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

 டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் இப்படித்தான் மோசமடையும். இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. 

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 366 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் நேற்று காலை அடர்ந்த மூடுபனி நிலவியது. 

இதற்கிடையே, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலை 8.30 மணிக்கு விமான ஓடுபாதையில் பார்வைத்திறன் பூஜ்யமாக குறைந்ததால், ஒரு சில விமானங்கள் தரையிறங்காமல் திருப்பி விடப்பட்டன. இதனால் டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதே போல, ஆனந்த் விஹார் மற்றும் ஆயா நகர் ஆகிய 2 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவானதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து