எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் : சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள், தங்களின் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை பம்பையில் நிறுத்த கோரள கோர்ட்டு அனுமதி வழங்கியிருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பரில் நடைபெறுகிறது. இதற்காக கோவில் நடை நாளை (15-ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகளை தேவசம் போர்டு அறிவித்திருக்கிறது.
அதன்படி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர். அது மட்டுமின்றி பக்தர்கள் தங்களின் இருமுடி கட்டுகளில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் ஆகியவற்றை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்பாட் புக்கிங் கிற்கு ஆதார் அட்டை கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதே போல் பல்வேறு புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள், தங்களின் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை பம்பையில் நிறுத்த கோரள கோர்ட்டு அனுமதி வழங்கியிருக்கிறது.
சபரிமலையில் பக்தர்களுக்கான வசதிகள் தொடர்பான மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அனில் நரேந்திரன், முரளி கிருஷ்ணா உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:-
சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு விழாவில் பம்பை மலை உச்சி மற்றும் சக்குபாலம் பகுதியில் பக்தர்கள் தங்களின் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும். அந்த பகுதிகளில் பக்தர்கள் 24 மணி நேரமும் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் சாலைகளின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 20 பஸ்க ளையும் மலை உச்சியின் தொடக்கத்தில் நிறுத்தலாம்.
தேவசம்போர்டு மற்றும் காவல்துறை இணைந்து வாகன நிறுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும். இந்த அனுமதி தற்காலிகமானது தான். போக்குவரத்து நெரிசல் அல்லது வேறு பிற பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் பம்பையில் வாகனங்கள் நிறுத்தும் முடிவை திரும்பப் பெறலாம்.
கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க அனைத்து அதிகாரங்களும் காவல் துறைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
பக்தர்களின் வாகனங்களை பம்பையில் நிறுத்த அனுமதி வழங்கினால் தங்களின் சங்கிலித்தொடர் சேவை பாாதிக்கப்படும் என்று கூறி, அந்த முடிவுக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வாதிட்டது.
ஆனால் தேவசம் போர்ட்டு தனது தரப்பு வாதத்தை வலுவாக வைத்ததால் பம்பையில் பக்தர்ளின் வாகனங்களை நிறுத்த ஐகோர்ட்டு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-01-2025.
13 Jan 2025 -
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சேவை புரிந்தோருக்கு தமிழக கவர்னர் விருதுகள் அறிவிப்பு
13 Jan 2025சென்னை: சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் சேவை புரிந்தோருக்கான விருதுகளை கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
-
பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: லாஸ் ஏஞ்சல்ஸில் 15 சதவீதம் தீ மட்டுமே கட்டுக்குள் வந்துள்ளது
13 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15 சதவீதம் தீ மட்டுமே
-
துபாய் கார் பந்தயத்தில் வெற்றி: நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் வாழ்த்து
13 Jan 2025சென்னை : துபாயில் நடந்த கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள
-
சென்னையிலிருந்து சிறப்பு பேருந்தில் 6.40 லட்சம் பேர் பயணம்
13 Jan 2025சென்னை : கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்
13 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500: டெல்லியில் காங். தேர்தல் வாக்குறுதி
13 Jan 2025புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8,500 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
-
பாக்.கில் சுரங்க விபத்து: 11 பேர் பலி
13 Jan 2025பலூசிஸ்தான் : பாகிஸ்தானில் சுரங்க விபத்தில் ஏற்பட்ட வாயுவெடிப்பில் சிக்கி பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
-
தொடர் கனமழை - நிலச்சரிவு: பிரேசிலில் 10 பேர் பலி
13 Jan 2025பிரேசிலியா : பிரேசிலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
13 Jan 2025சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 கேரள மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு
13 Jan 2025திருவனந்தபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சனாதன தர்மத்தை மீட்டவர்: வள்ளலாருககு கவர்னர் புகழாரம்
13 Jan 2025கிருஷ்ணகிரி: சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
-
மகா கும்பமேளாவால் உத்தரப்பிரதேச அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய்
13 Jan 2025லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நேற்று தொடங்கியிருக்கும் மகா கும்பமேளாவால் உ.பி.க்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் உற்பத்தி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
13 Jan 2025சென்னை: நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார் .
-
இன்று பொங்கல் பண்டிகை: தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
13 Jan 2025சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு
13 Jan 2025மேட்டூர் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 115.03 அடியில் இருந்து 114.74 அடியாக சரிந்துள்ளது.
-
கார் பந்தயத்தில் வெற்றி: நடிகர் அஜித்திற்கு இ.பி.எஸ். வாழ்த்து
13 Jan 2025சென்னை: கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
-
காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியம்: மகா கும்பமேளா குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி
13 Jan 2025புதுடெல்லி: மகா கும்பமேளா, இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியது என பிரதமர் தெரிவித்துள்ளார்.;
-
காஷ்மீரில் ரூ.2,700 கோடியில் கட்டப்பட்டுள்ள சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
13 Jan 2025ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் 'இசட்' வடிவ சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
-
போக்சோ வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கைது
13 Jan 2025மதுரை: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
உ.பி. மகா கும்பமேளா கோலாகல தொடக்கம்: லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்
13 Jan 2025பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்.
-
தமிழக காவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
13 Jan 2025சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்
-
ராஜஸ்தானில் கடும் குளிர்: பள்ளிகளுக்கு விடுமுறை
13 Jan 2025ஜெய்ப்பூர் : கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.