எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரோகித் சர்மா மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கவில்லை. அவரது மனைவி ரித்திகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் உடன் இருந்து கவனிப்பதற்காக அவர் செல்லவில்லை. இரு தினங்களுக்கு முன்பு ரித்திகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ரோகித் சர்மா செல்ல விரும்பவில்லை. 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக அணியுடன் இணைந்து விடுவேன் என்று ரோகித் சர்மா தேர்வு குழுவினரிடம் கூறியுள்ளார். எனவே முதலாவது டெஸ்டில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்த இருக்கிறார்.
இதனிடையே முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவே ரோகித் சர்மாவிற்கு குழந்தை பிறந்து விட்டதால் அவர் முதல் போட்டியில் விளையாட வேண்டும் என்று கங்குலி போன்ற பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். இந்நிலையில் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாதது சரிதான் என்றும் அவருக்கு குடும்பம் மிகவும் முக்கியம் என்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "எனது வாழ்க்கையிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றால் எனது மகள் பிறந்த தினம்தான். அது ஒரு டெஸ்ட் போட்டி வெற்றி அல்லது உலகக்கோப்பை வெற்றியை விட அதிகம். இது மிகவும் வித்தியாசமானது. நீங்கள் அதை எதற்கும் ஒப்பிட முடியாது என்று கூறினார்.
______________________________________________________________________
நாதன் லயன் நம்பிக்கை
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதலாவது ஆட்டம் வரும் 22- தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் உலகின் பலம் வாய்ந்த இரு அணிகள் மோத உள்ளதால் இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேற இந்த தொடரில் இந்தியா கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதால் ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பக்கமும் இதன் மீது திரும்பியுள்ளது. இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கடும் குடைச்சல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் தொடரில் இந்தியாவின் சிறந்த வீரரான விராட் கோலியை அவுட்டாக்க தமக்கு தாமே சவால் விடுத்துள்ளதாக நாதன் லயன் தெரிவித்துள்ளார். மேலும் நியூசிலாந்திடம் தோற்றாலும் இப்போதும் இந்தியா ஆபத்தான அணி என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:- "ஆஸ்திரேலியாவில் விராட் கோலியின் சாதனைகளை பாருங்கள். ஒட்டு மொத்தமாக அவருடைய புள்ளிவிவரங்களையும் பாருங்கள். அவரைப் போன்ற சாம்பியன் வீரர்களை நீங்கள் முடிந்தவர்களாக எழுத முடியாது. விராட் கோலியின் மீது மரியாதை தவிர்த்து என்னிடம் வேறு எதுவும் இல்லை. அதே சமயம் அவரை நான் அவுட்டாக்க விரும்புகிறேன் என்று சொல்வதில் ஒளிந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் அது சவாலாகும். அவரும் ஸ்டீவ் சுமித்தும் கடந்த சகாப்தத்தில் விளையாடிய 2 சிறந்த பேட்ஸ்மேன்கள். அவருக்கு எதிராக கடந்த காலங்களில் நிறைய முறை போட்டியிட்டது சிறந்த விஷயமாகும். இந்தியா முழுவதுமாக சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த ஆபத்தான அணியாகும். அவர்களிடம் நிறைய அனுபவமும் இருக்கிறது என்று தெரிவித்தார்.
______________________________________________________________________
தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெம்பா பவுமா , டேவிட் பெடிங்ஹாம், ஜெரால்ட் கோட்ஸி, டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், கைல் வேரின் .
______________________________________________________________________
பாகிஸ்தான் வீரர் சாதனை
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் ஆக்கியது. இதில் நடைபெற்ற கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.1 ஓவர்களில் 117 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பாபர் அசாம் 41 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் பாபர் அசாம் அடித்த 41 ரன்களையும் சேர்த்து இதுவரை டி20 கிரிக்கெட்டில் 4192 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற விராட் கோலியின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ளார். இந்த பட்டியலில் ரோகித் சர்மா 4231 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். எனினும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விராட் மற்றும் ரோகித் ஓய்வு பெற்று விட்டதால் பாபர் அசாம் முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. அந்த பட்டியல் வருமாறு., 1. ரோகித் சர்மா - 4231, 2. பாபர் அசாம் - 4190 ரன்கள், 3. விராட் கோலி - 4188 ரன்கள், 4. பால் ஸ்டிர்லிங் - 3655 ரன்கள், 5. மார்ட்டின் குப்தில் - 3531 ரன்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-11-2024.
20 Nov 2024 -
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் தரிசன முன்பதிவை 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவு
20 Nov 2024திருவனந்தபுரம், சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவை 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
-
தீவிரமடையும் போர்: உக்ரைனில் அமெரிக்க தூதரகம் தற்காலிக மூடல்
20 Nov 2024வாஷிங்டன், போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக தி.மு.க.வினர் இப்போதே பிரச்சாரத்தை தொடங்க வேண்டும்: உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம்
20 Nov 2024சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.
-
பட்டுக்கோட்டையில் பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை
20 Nov 2024பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டையில் பள்ளி ஆசிரியை ஒருவர் நேற்று வகுப்பறைக்குள் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இரு
-
ஓசூரில் கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு
20 Nov 2024ஓசூர், ஓசூரில் கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவின் கல்வித்துறை செயலாளராக லிண்டா மெக்மஹோனை நியமிக்க டிரம்ப் பரிந்துரை
20 Nov 2024வாஷிங்டன், அமெரிக்காவின் கல்வித்துறை செயலாளராக லிண்டா மெக்மஹோனை நியமிக்க டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
-
கயானா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
20 Nov 2024ஜார்ஜ் டவுன், பிரேசில் பயணத்தை நிறைவு செய்து விட்டு பிரதமர் மோடி கயானா சென்றடைந்தார்.
-
நெல்லையில் தொடர் கனமழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
20 Nov 2024நெல்லை : நெல்லையில் பெய்து வரும் தொடர் மழையை அடுத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.
-
மாமல்லபுரத்தில் 2 நாள் கடலோர பாதுகாப்பு ஒத்திகை துவங்கியது
20 Nov 2024மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் நேற்று முதல் கடலோர பாதுகாப்பு படையின் சீ விஜில் எனும் 2 நாள் கண்காணிப்பு ஒத்திகை நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
-
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வரும் 1-ம் தேதி கோவை பயணம்: உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தீவிரம்
20 Nov 2024கோவை, கோவை கொடிசியாவில் வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி வரும் 1-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க தமிழக பா.ஜ.க.
-
தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
20 Nov 2024சென்னை, தஞ்சை அரசுப் பள்ளியில் 26 வயதாகும் ஆசிரியை ரமணி என்பவர் நேற்று காலை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
-
இஸ்ரேல் பணய கைதிகளை கண்டுபிடித்தால் சன்மானம் : பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
20 Nov 2024ஜெருசலேம் : காசா முனையில் பணய கைதிகளாக உள்ளவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலா ரூ. 42 கோடி சனமானம் தரப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
தமிழக மீனவர்களின் 13 விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அனுமதி
20 Nov 2024ராமேசுவரம், இலங்கை நீதிமன்றங்களால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 13 விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அந்நாட்டு மீன்வளத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
-
தி.மு.க. கூட்டணியில் தொடருவோம்: ம.தி.மு.க. செயலாளர் துரை.வைகோ
20 Nov 2024பெரம்பலூர் : தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொடரும் என்று அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை. வைகோ எம்.பி. தெரிவித்தாா்.
-
மேலும் 275 மில்லியன் டாலருக்கு ஆயுத உதவி உக்ரைனுக்கு வழங்குகிறது அமெரிக்கா
20 Nov 2024வாஷிங்டன், உக்ரைனுக்கு மேலும் 275 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
-
டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி: அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு
20 Nov 2024புது டெல்லி, டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அரசு உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
எதிர்மறை விமர்சனம்: திரையரங்குகளில் யூடியூப் சேனல்களை அனுமதிக்க கூடாது: சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
20 Nov 2024சென்னை, திரையரங்குகளில் யூடியூப் சேனல்களை அனுமதிக்க கூடாது என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்து அல்லாத ஊழியர்களை வெளியேற்ற தேவஸ்தானம் முடிவு: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வரவேற்பு
20 Nov 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்து அல்லாத ஊழியர்களை வெளியேற்றும் தேவஸ்தானத்தின் முடிவுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
ராணிப்பேட்டை யோக நரசிம்மர் கோவிலில் நடிகர் சூர்யா, இயக்குனர் சிவா சாமி தரிசனம்
20 Nov 2024ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிவா சாமி தரிசனம் செய்தனர்.
-
பாகிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலில் 12 வீரர்கள் பலி
20 Nov 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்டுங்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர் பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற
-
நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
20 Nov 2024சென்னை, நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மராட்டிய சட்டசபை தேர்தல்: முதல்வர் ஷிண்டே உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு
20 Nov 2024மும்பை, மராட்டிய சட்டமன்றத் தேர்தலில் அம்மாநில முதல்வர் ஏக்நாத்ஷிண்டே உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவே
-
பாக். கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 14 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
20 Nov 2024சென்னை, பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 14 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்க
-
இரு நாட்டு உறவுகள் குறித்து கயனா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
20 Nov 2024பிரேசிலா : பிரேசில் பயணத்தை முடித்து கயானா சென்றடைந்த பிரதமர் நரேந்தி மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.