முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி முர்மு உதகை வருகை: ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      தமிழகம்
Udagai 2024-11-25

Source: provided

 

உதகை:  ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை (27-ம் தேதி) நீலகிரி மாவட்டம் உதகை வருவதை ஒட்டி உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டன.

ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை (வரும் 27 ஆம் தேதி) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீலகிரி மாவட்டம் வருகிறார். கோவை விமான தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை வந்தடையும் ஜனாதிபதி உதகை ராஜ்பவனில் தங்குகிறார். 28-ம் தேதி சாலை மார்க்கமாக குன்னூரில் உள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இந்நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை (27-ம் தேதி) நீலகிரி மாவட்டம் உதகை வருவதை ஒட்டி உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் நேற்று 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமடித்தவாறு இறங்கி ஒத்திகையில் ஈடுபட்டன. இதனால் அப்பகுதியில் கூடுதல் எஸ்பி சவுந்திரராஜன், டிஎஸ்பி யசோதா தலைமையில் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து