முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரத்தை கைப்பற்றுவதே எதிர்க்கட்சிகளின் லட்சியம்: காங்கிரஸ் மீது பிரதமர் மறைமுக தாக்கு

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      அரசியல்
mODI 2023-05-25

புவனேஸ்வர், அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒரே லட்சியம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அதிகாரத்தை தங்கள் பிறப்புரிமையாக கருதுபவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக தாக்கி பேசினார். 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- "மக்களை தவறாக வழிநடத்தி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒரே லட்சியம். அவர்கள் ஜனநாயகத்தின் நெறிமுறைகளை நிராகரித்து, அரசியலமைப்பை சீர்குலைத்தனர். அதிகாரத்தை தங்கள் பிறப்புரிமையாக கருதுபவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இல்லை.

அரசியல் கட்சிகளிடையே கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருப்பது சகஜம்தான். நான் முதல்வராக இருந்தபோது அரசியலின் நிறம் வேறு மாதிரியாக இருந்தது. ஜனநாயக நாட்டில் ஆக்கபூர்வமான எதிர்ப்புகள் இருப்பது ஆரோக்கியமானது. ஆனால் இப்போது எதிர்ப்புகளை தெரிவிக்கும் விதம் மிகப்பெரிய அளவில் மாறிவிட்டது. மக்கள் பா.ஜ.க.வை தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்பதை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர்களுக்கு கடந்த 19 ஆண்டுகளாக அதிகாரம் மறுக்கப்பட்டுள்ளதால், பொய்களையும், வதந்திகளையும் பரப்பி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இதுபோன்ற முயற்சிகளை முறியடித்து, பொய்களை அம்பலப்படுத்த நாட்டை நேசிப்பவர்களும், அரசியலமைப்பை மதிப்பவர்களும் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும்.  இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து