எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கான்பெர்ரா : பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றது.
இந்தியா முன்னிலை...
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ம் தேதி (பகல்-இரவு போட்டி) தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.
மழையால் ரத்து...
அதன்படி நேற்று முன்தினம் தொடங்க இருந்த பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.இதனையடுத்து 2-வது மற்றும் கடைசி நாளான நேற்று பயிற்சி ஆட்டம் 46 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பிரதமர் லெவன் அணி 240 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் சாம் கான்ஸ்டாஸ் சதமடித்து அசத்தினார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்சித் ராணா 4 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஜெய்ஸ்வால்....
இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் நிலைத்து ஆடினர். சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். தொடக்க விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் 45 ரன்களில் ஆட்டமிழந்தார் . பின்னர் வந்த ரோகித் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து கில், நிதிஸ் ரெட்டி இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். கில் அரைசதமடித்தார். இறுதியில் இந்திய அணி 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்து இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 days ago |
-
ஐ.பி.எல். பெங்களூரு அணிக்கு விராட் கோலி புதிய கேப்டன்?
01 Dec 2024பெங்களூரு : ஐ.பி.எல். 2025 சீசனில் விராட் கோலிதான் பெங்களூரு அணியின் கேப்டன் என இந்திய முன்னணி வீரர் அஸ்வின் உறுதிப்படுத்தியுள்ளார்.
-
வைகை அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை
01 Dec 2024தேனி : அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
01 Dec 2024நாகை : நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்ட பாக்.?
01 Dec 2024துபாய் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை நிபந்தனைகளுடன் ஹைபிரிட் மாடலில் (பாகிஸ்தானுக்கு வெளியே) நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெள
-
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி : அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
01 Dec 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்ட நிலையில், அனைத்து தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது.
-
மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது : தெற்கு ரெயில்வே அறிவிப்பு
01 Dec 2024சென்னை : ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தலைவராக பொறுப்பேற்றார் ஜெய் ஷா
01 Dec 2024துபாய் : ஐ.சி.சி.யின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா நேற்று (டிசம்பர் 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
டாலரை விட்டு வெளியேறும் பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை
01 Dec 2024வாஷிங்டன் : பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை தவிர்த்து வேறு நாணயத்தில் வர்த்தகம் மேற்கொள்ள வாய்ப்பில்லை என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அடிலெய்டு டெஸ்ட் போட்டி: மிடில் ஆர்டரில் களமிறங்கும் இந்திய அணி கேப்டன் ரோகித்
01 Dec 2024அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 6-ம் தேதி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித்
-
8 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்றனர்
02 Dec 2024 -
திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து இ.பி.எஸ். வேதனை
02 Dec 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-12-2024.
02 Dec 2024 -
பயிற்சி ஆட்டத்தில் அபாரம்: ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியை வீழ்த்தியது இந்தியா
01 Dec 2024கான்பெர்ரா : பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றது.
இந்தியா முன்னிலை...
-
ட்ரூ விஷன் கதைகள் - 6-ம் தொகுதி வெளியீடு
02 Dec 2024இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதிய
-
சொர்க்கவாசல் விமர்சனம்
02 Dec 2024ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் Swipe Right Studios மற்றும் Think Studios இணைந்து தயாரித்துள்ள படம் சொர்க்கவாசல்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: 3-வது இடத்துக்கு சரிந்த ஆஸ்திரேலியா
01 Dec 2024துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்துக்கு சறுக்கியுள்ளது.
இந்தியா சறுக்கல்...