எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, 'ஃபெஞ்சல்' என்ற பெயருடன் வலுப்பெற்று, நிலப்பகுதிக்குள் கடந்த 3 நாட்களுக்கு முன் நுழைந்தது. இதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன் மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய 'ஃபெஞ்சல்' புயல், இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், புதுச்சேரிக்கு அருகே கடந்த 3 நாட்களுக்கு முன் இரவில் இருந்து 'ஃபெஞ்சல்' புயல் நகராமல் அப்படியே நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில் சுமார் 12 மணி நேரத்துக்கு மேல் 'ஃபெஞ்சல்' புயல் நிலப்பகுதியில் கரையேறியும் வலு குறையாமல் புதுச்சேரியில் நகராமல் நின்று புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் மழையை கொட்டித் தீர்த்தது. அந்த பகுதிகளில் எல்லாம் இதுவரை இல்லாத மழைப்பதிவாக அது பதிவானது. அதன்பின்னர், நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு பிறகு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின்னர் இரவுக்குள் தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுவிழக்கும் என்றும் நாளை வடக்கு கேரளா- கர்நாடகா கடற்கரையில் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போச்சம்பள்ளியில் 25 செ.மீ. மழையும், திருவண்ணாமலையில் 22.2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நேற்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு (12 முதல் 20 செ.மீ) வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 days ago |
-
ஐ.பி.எல். பெங்களூரு அணிக்கு விராட் கோலி புதிய கேப்டன்?
01 Dec 2024பெங்களூரு : ஐ.பி.எல். 2025 சீசனில் விராட் கோலிதான் பெங்களூரு அணியின் கேப்டன் என இந்திய முன்னணி வீரர் அஸ்வின் உறுதிப்படுத்தியுள்ளார்.
-
வைகை அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை
01 Dec 2024தேனி : அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
01 Dec 2024நாகை : நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்ட பாக்.?
01 Dec 2024துபாய் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை நிபந்தனைகளுடன் ஹைபிரிட் மாடலில் (பாகிஸ்தானுக்கு வெளியே) நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெள
-
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி : அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
01 Dec 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்ட நிலையில், அனைத்து தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது.
-
மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது : தெற்கு ரெயில்வே அறிவிப்பு
01 Dec 2024சென்னை : ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தலைவராக பொறுப்பேற்றார் ஜெய் ஷா
01 Dec 2024துபாய் : ஐ.சி.சி.யின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா நேற்று (டிசம்பர் 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
கனமழை பெய்வதால் சபரிமலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாம்
01 Dec 2024திருவனந்தபுரம் : சபரிமலையில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தரிசனத்துக்குச் சென்று வருகின்றனர்.
-
டாலரை விட்டு வெளியேறும் பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை
01 Dec 2024வாஷிங்டன் : பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை தவிர்த்து வேறு நாணயத்தில் வர்த்தகம் மேற்கொள்ள வாய்ப்பில்லை என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிப்பு
01 Dec 2024கடலூர் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அடிலெய்டு டெஸ்ட் போட்டி: மிடில் ஆர்டரில் களமிறங்கும் இந்திய அணி கேப்டன் ரோகித்
01 Dec 2024அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 6-ம் தேதி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித்
-
8 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்றனர்
02 Dec 2024 -
திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து இ.பி.எஸ். வேதனை
02 Dec 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-12-2024.
02 Dec 2024 -
பயிற்சி ஆட்டத்தில் அபாரம்: ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியை வீழ்த்தியது இந்தியா
01 Dec 2024கான்பெர்ரா : பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றது.
இந்தியா முன்னிலை...
-
ட்ரூ விஷன் கதைகள் - 6-ம் தொகுதி வெளியீடு
02 Dec 2024இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதிய
-
சொர்க்கவாசல் விமர்சனம்
02 Dec 2024ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் Swipe Right Studios மற்றும் Think Studios இணைந்து தயாரித்துள்ள படம் சொர்க்கவாசல்.