முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்தது ஏன்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2024      தமிழகம்
Ma Subramani-2023-11-09

Source: provided

சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்தது ஏன்? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் ஆற்றோரம் வசிக்கும் முதியவர்களுக்கு அரிசி, பெட்ஷீட் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பதற்கான காரணம் குறித்து அவர் பேசியதாவது:-

ஏரிகளை திறப்பதில் முதலமைச்சர் மிகவும் கவனமாக இருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சம்பவத்தை யாரும் மறக்க முடியாது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடி உயரத்தில், 23.42 அடி உயரம் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஏரிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

நாளை 17-ம் தேதி பெரிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீரை குறைக்காவிட்டால், கரை உடைந்து ஆபத்து ஏற்படக்கூடும். நீரை குறைப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு 22 அடியாக குறைந்து விடும். 17ம் தேதி மழை வந்தால் 2 அடி உள்வாங்கி குடிநீருக்கு நிரம்பி இருக்கும் இதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து