முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் : திருமாவளவன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2024      தமிழகம்
Thirumavalavan-1 2024-06-21

Source: provided

திருச்சி : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. பேட்டி கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தி.மு.க.வுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். தி.மு.க.வுடனான கூட்டணியில் விசிக இருந்துவரும் நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து கட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியதால், வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜுனா 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

இதுதொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில், அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் வி.சி.கவில் எனது பயணத்தை தொடங்கினேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்கள் நன்கு அறிவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான அரசியல். குறிப்பாக 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாக இங்கு பதிவு செய்கிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை, எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறியும் பணியில் ஈடுபடுவேன். சமூக அநீதிகளுக்கு எதிரான எனது குரல் சமரசமின்றி ஒலிக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட பின்பும் தன்னை பற்றி பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்கிறார். ஆதவ் இப்படி பேசி வருவதைப் பார்த்தால் அவருக்கு ஏதோ திட்டம் இருப்பதுபோல தெரிகிறது. இடைநீக்கம் என்பது வெறும் கண்துடைப்பு அல்ல. ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் சூழலில் மீண்டும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லுவதே தவறு. அப்படி சொல்லக்கூடாது ஆதவ் அர்ஜுனா மீண்டும் வி.சி.க.வில் இயங்க வேண்டுமென நினைத்திருந்தால் 6 மாதங்கள் அமைதியாக இருந்திருப்பார்" என்று திருமாவளவன் கூறினார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், மழை வெள்ள நிவாரண நிதியாக ரேஷன் அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் கால்நடைகள், பொருட்களின் சேதங்களுக்கு ஏற்ப நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து