முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் மீது பஸ் மோதி விபத்து; புதுமண தம்பதிகள் உட்பட 4 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2024      இந்தியா
Acctnet

Source: provided

பத்தனம்திட்டா : கேரளாவில் கார் மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டதில், புதுமண தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம், பத்தனம்திட்டா பகுதியில் சபரிமலை பக்தர்கள் சென்ற பஸ் மற்றும் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், குடும்பத்துடன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த புதுமண தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் காருக்குள் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் விசாரணையில் புதுமண தம்பதிகள் மலேசியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டு, வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. புதுமண தம்பதிகள் பெயர் நிகில், அனு என போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். நிகில் கனடாவில் வேலை பார்த்து வந்துள்ளார்.

டிரைவர் தூங்கியது விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். தமிழகத்தில் இருந்து பக்தர்கள் சென்ற பஸ்சில் பயணம் செய்த சிலர் மற்றும் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குவைத்தில் இருக்கும் நிகிலின் சகோதரி வீடு திரும்பியதும் நால்வரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து