முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நிறைவு

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2024      இந்தியா
Revanth-Reddy 2023-12-03

Source: provided

ஹைதராபாத் : தெலங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு கடந்த மாதம் (நவ. 6) தொடங்கப்பட்டது. இந்த நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு பணிகள் 98 சதவிகிதம் நிறைவுற்றுள்ளதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் குருமா சமூக நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது, தெலங்கானாவில் சமுதாய நலப் பரிசோதனையாக இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு அமையும்.

இதன்மூலம், திரட்டப்பட்டுள்ள தரவுகள் ஆளும் காங்கிரஸ் அரசால் பஞ்சாயத்து, சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் குருமா சமூகத்தினரின் மக்கள்தொகைக்கேற்ப அவர்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்க வழிவகை செய்யும்” என்றார்.

மேலும், பட்டியலினப் பிரிவில்(எஸ்சி) உள்ள உள்பிரிவுகள் குறித்த விவகாரத்தில் அமைச்சர் என். உத்தம் குமார் ரெட்டி தலைமையில் ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதன் மூலம், மடிகா சமூகத்திற்கு சமூகநீதி கிடைக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார். அந்த சமூகத்தைச் சேர்ந்தோருக்கு மாநில அரசு நிறுவனங்களில் உயர் பொறுப்புகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து