முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொண்டர்களே அ.தி.மு.க.வின் பலம் : எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2024      தமிழகம்
EPS 2024-12-15

Source: provided

சென்னை : தொண்டர்களே அ.தி.மு.க.வின் பலம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில்  நடைபெற்றது.

அவைத் தலைவர் தமிழ் மகன்உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- கூட்டணி வரும் போகும் ஆனால் கொள்கை என்பது நிலையானது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கட்சி அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின் பல விமர்சனங்கள் எழுந்தன.

எந்த கட்சிக்கும் இல்லாத தொண்டர் பலம் அ.தி.மு.க.விற்கு உள்ளது.உறுப்பினர்கள் அட்டைகளை வீடு வீடாக சென்று அளித்த ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும் தான். 2024 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி குறைவான வாக்குகளை பெற்றது. பாராளுமன்ற தேர்தல் என்பது வேறு, சட்டசபை தேர்தல் என்பது வேறு.2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் உண்மையில் சரிந்துள்ளது. 2014 தேர்தலை ஒப்பிடும்போது பா.ஜ.க. 1 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை இழந்துள்ளது.

2021 தேர்தலில் அ.தி.மு.க. 34 இடங்களில் குறைந்த வாக்குகளில் தோற்றது. 2021-ம் ஆண்டு தேர்தலில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெறவில்லை. 1 லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றி உள்ளது.அ.தி.மு.க.விற்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது.யானைக்கு பலம் தும்பிக்கை. நமக்கு பலம் நம்பிக்கை என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து