முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலிஸ்தானியர்கள் குறித்து இந்திய உளவுத்துறைக்கு ரஷ்யா தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2024      உலகம்
Ajith-Doval 2024-09-08

Source: provided

அமெரிக்கா : காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறித்த தகவல்களை ரஷியா இந்திய உளவு அமைப்பான ராவிற்கு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராவுடனும், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனும் தொடர்பில் உள்ள ரஷிய அமைப்புகள் இந்த முக்கிய தகவல்களைப் பரிமாறுவதாக சீக்கியர்களுக்கான நீதி எஸ்.எப்.ஜே. அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவால் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் இணை நிறுவனர் குருபத்வந்த் சிங் பன்னுன், காலிஸ்தானுக்கு எதிராகச் செயல்படுவதாக ரஷியாவை எச்சரித்துள்ளார்.

ரஷிய ஊடகம் காலிஸ்தான் குறித்த தப்பெண்ணத்தை பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே நியூ யார்க்கில் உள்ள ரஷிய தூதரகம் முன் எஸ்எப்ஐ உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அமரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள ரஷிய தூதரகம் முன்னும் ஆர்ப்பாட்டம் நடத்த எஸ்எப்ஐயினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக குருபத்வந்த் சிங் பன்னுன் மீதான கொலை முயற்சியில் இந்தியாவை தொடர்புப்படுத்தி சர்ச்சை எழுந்ததும், அவர் இந்திய விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து