முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி புகாரில் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் - ரசிகர்கள் அதிர்ச்சி

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      விளையாட்டு
Rabin 2024-12-21

Source: provided

பெங்களூரு : டோனியின் தலைமையில் 2007 டி-20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ராபின் உத்தப்பாவுக்கு மோசடி புகாரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியில்...

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வந்தவர் ராபின் உத்தப்பா. மகேந்திர சிங் டோனியின் தலைமையில் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் உத்தப்பா இடம்பெற்றிருந்தார். உத்தப்பா இந்தியாவுக்காக 46 ஒருநாள் மற்றும் 13 டி-20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 

பி.எப். மோசடி...

இந்நிலையில், ராபின் உத்தப்பாவுக்கு எதிரான வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) மோசடி புகாரைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதியின் பிராந்திய ஆணையர் சடாக்சரி கோபால் ரெட்டி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார், மேலும் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கர்நாடகா மாநிலத்தின் புலகேசிநகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

சம்பள பணத்தில்... 

முன்னதாக செஞ்சுரிஸ் லைப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் நிர்வாகத்தை ராபின் உத்தப்பா நடத்தி வந்தார். இந்த நிறுவன ஊழியர்களின் சம்பள பணத்தில் பி.எப். பிடித்தம் செய்துவிட்டு, பின்னர் அதை அவரது கணக்கில் சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.23 லட்சம் என்று கூறப்படுகிறது.

காவல்துறைக்கு. 

கடந்த டிசம்பர் 4-ம் தேதியிட்ட கடிதத்தில், கைது வாரண்டை நிறைவேற்றுமாறு சடாக்சரி கோபால் ரெட்டி காவல்துறைக்கு அறிவுறுத்தினார். இருப்பினும், உத்தப்பா தனது குடியிருப்பை மாற்றியதைத் தொடர்ந்து, பி.எப். அலுவலகத்திற்கு வாரண்ட் திருப்பி அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து உத்தப்பாவை பிடித்து அவரிடம் நேரில் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து