முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் கோர்ட் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் ஆறுதல்

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2024      இந்தியா
Rahul 2024-12-04

Source: provided

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரத்தில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.

மகாராஷ்டிர மாநிலம் பர்பானியில் கடந்த  10‑ம் தேதி அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அரசமைப்புப் புத்தகம் சேதப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் நீதிமன்றக் காவலில் இருந்த சோம்நாத் சூரியவன்சி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதட்ட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த சோம்நாத் சூரியவன்சியின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள்  சந்தித்துப் பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 min ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 14 min ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து