முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் ரூ.10,740 கோடியில் 34.8 கி.மீ. மெட்ரோ ரயில் திட்டம் மெட்ரோ நிறுவன இயக்குனர் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2024      தமிழகம்
metro 2024-12-24

Source: provided

கோவை: கோவையில் ரூ.10,740 கோடியில் 34.8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார். 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் கோவையில் நேற்றுசெய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; கோவையில் ரூ.10,740 கோடியில் 34.8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். கூடுதல் விபரங்கள் ஒன்றிய அரசுக்கு கொடுத்துள்ளோம்; ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் நேற்று கலந்து ஆலோசனை நடத்தப்பட்டது. கோவையில் 32 ரயில் நிலையங்கள் இருக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஆரம்ப கட்ட பணிகளை துவங்க இருக்கின்றோம். 10 ஹெக்டேர்களை இரு வழித்தடங்களுக்கும், 16 ஹெக்டேர் ரயில் நிலையங்களுக்காக கையகப்படுத்த வேண்டி உள்ளது. கோவை நீலாம்பூரில் மெட்ரோ ரயில் டெப்போ அமைக்கப்படுகிறது. கோவையில் நிலம் கையகப்படுத்த ஆயத்த பணிகளை துவங்கி இருக்கிறோம் என எம்.ஏ.சித்திக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து