முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க மருத்துவக்காப்பீடு நிறுவன சி.இ.ஓ. கொலை வழக்கில் திருப்பம் குற்றத்தை ஒப்புக்கொள்ள கொலையாளி மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2024      உலகம்
america 2024-12-24

Source: provided

அமெரிக்கா: அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் யுனைடட் ஹெல்த்கேர். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தாம்சன் கடந்த டிசம்பர் 4-ம் தேதி ஹோட்டல் வாசலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி பென்சில்வேனியாவில் மெக்டோனால்ஸ் கடையில் வைத்து 26 வயதான இன்ஜினீயரிங் பட்டதாரி லூய்கி மான்ஜியோன் என்ற இளைஞரை எப்.பி.ஐ. போலீஸ் கைது செய்தது. வீட்டிலேயே 3டி பிரிண்டர் மூலம் துப்பாக்கியை செய்து அதன்மூலம் இந்த கொலையை அவர் செய்ததாக போலீஸ் தெரிவித்தது.

லைஃப் இன்சூரன்ஸ் சார்ந்த யுனைடட் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்களின் அணுகுமுறை மக்களின் உயிரை பணமாக பார்ப்பதாக வெகு மக்களிடையே கோபம் இருந்து வந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மான்ஜியோனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் அந்த கொலையை செய்யவில்லை என்று மாஞ்சியோன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கொலை, பயங்கரவாத செய்லபாடுகள் உள்ளிட்ட 11 பிரிவுகளின்கீழ் மாஞ்சியோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மான்ஹாட்டனில் உள்ள நியூ யார்க் மாகாண குற்றவியல் நீதிமன்றத்தில் மாஞ்சியோன் ஆஜர்படுத்தப்பட்டார். மான்ஜியோனுக்கு ஆதரவாக வாதாட பெண் வழக்கறிஞர் கேரன் ஆக்னிபிலோ ஆஜரானார். தனது கட்சிக்காரரை மனித பிங்பாங் பந்துபோல் அதிகாரிகள் நடத்துவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாஞ்சியோன் தான் குற்றம் செய்யவில்லை என்று தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணை 2025, பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுவரும் இந்த வழக்கில் மாஞ்சியோன் குற்றத்தை ஒப்புக்கொள்ளாதது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து