முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிஜிட்டல் கைது என்ற நடைமுறை இல்லை: பெங்களூரு போலீஸ் கமிஷனர் தகவல்

புதன்கிழமை, 25 டிசம்பர் 2024      இந்தியா
Jaill 20221 01 04

பெங்களூரு, நமது சட்டமும், அரசியலமைப்பிலும், 'டிஜிட்டல்' கைது என்ற நடைமுறை எதுவும் இல்லை. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,'' என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா தெரிவித்தார்.

நாட்டில் எந்த புலனாய்வு துறையும், 'டிஜிட்டல்' கைது செய்வதில்லை. அச்சுறுத்தல் அழைப்பு தொடர்பாக, பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை கைது செய்ய நோட்டீஸ் கொடுத்தோ அல்லது நேரடியாக சந்தித்து கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. கைது செய்யப்படுவோர், 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.

ஆனால், நமது சட்டத்தில் 'டிஜிட்டல்' கைது என்பதை இல்லை. இதுதொடர்பாக எந்த நடைமுறையும் இல்லை. மக்களுக்கு சட்டம் தொடர்பாக சிறிதளவு தெளிவு இருந்தால், ஆன்லைன் மோசடியாளர்களின் மிரட்டலுக்கு அஞ்ச தேவையில்லை. யாராவது உங்களை தொடர்பு கொண்டு கைது மிரட்டல் என்று கூறினால், உங்கள் பகுதியில் உள்ள போலீசை தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான தகவலை அவர்கள் அளிப்பர்.

அரசின் எந்த புலனாய்வு துறையும், வீடியோ கால் மூலம் விசாரணை நடத்தமாட்டார்கள். முதலில் அவர்கள் நோட்டீஸ் அனுப்புவர் அல்லது நேரடியாக வந்து விசாரணை நடத்துவர். கர்நாடகாவில் நவம்பர் வரை ஆன்லைன் மூலம் மோசடி செய்ததாக, 641 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதன் மூலம், 109 கோடி ரூபாய் இழந்துள்ளனர். இதில், 480 வழக்குகள் பெங்களூரில் நடந்துள்ளது. 42.4 கோடி ரூபாயில், 9 கோடி ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து