முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்சிங் டே டெஸ்ட் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இன்று மெல்போர்னில் மோதல்

புதன்கிழமை, 25 டிசம்பர் 2024      விளையாட்டு
25-Ram-50

Source: provided

மெல்போர்ன்: பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தொடர் சமனில்...

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

தொடக்க வீரராக...

இந்த நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும்  ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்கினார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை.  இதனால் கடந்த போட்டிகளில் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல். ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்குவார்  என கூறப்படுகிறது

2 ஸ்பின்னர்கள்.... 

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் கடந்த 21-ந்தேதியில் இருந்து அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி 2 ஸ்பின்னர்களுடன் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ராகுல் 3ம் இடத்தில்... 

ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் ஆடும் லெவனில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. சுந்தர் ஆடும் லெவனில் இடம் பெறுவதால் நிதிஷ் குமார் ரெட்டிக்கு இன்றைய ஆட்டத்தில் இடம் கிடைக்காது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலுடன், ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்க உள்ளதாகவும். ராகுல் 3ம் இடத்தில் ஆட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சுப்மன் கில் எந்த இடத்தில் விளையாடுவார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து