முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.அ.உரிமை சட்ட திருத்த மசோதா: இன்று விவாதம்

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, செப். 2 - அரசியல் கட்சிகளை காப்பாற்றும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வகை செய்யும் மசோதா மீது இன்று பாராளுமன்ற லோக்சபையில் விவாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது. 

தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா 2013 - ஐ பாராளுமன்ற மக்களவையில் கடந்த ஆகஸ்ட் 12 ம் தேதி மத்திய அமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்து தாக்கல் செய்தார். இந்த சட்டத்தின் கீழ் காங்கிரஸ், பாரதீய ஜனதா, தேசியவாத காங்கிரஸ், இ. கம்யூனிஸ்டு, வ. கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 6 தேசிய அரசியல் கட்சிகளை கொண்டு வர மத்திய தகவல் கமிஷன் உத்தரவிட்டது. இவ்வாறு உத்தரவிடப்பட்டு 2 மாதங்களுக்கு பிறகு மத்திய அமைச்சரவை கூடி இதில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்தது. 

அதாவது தகவல் அறியும் விஷயத்தில் அரசியல் கட்சிகளை காப்பாற்றும் பொருட்டு இந்த திருத்த மசோதாவை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்த மசோதா இன்று பாராளுமன்ற லோக்சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 23, 24, 26, 29 ஆகிய தேதிகளில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவ்வாறு விவாதம் நடத்த முடியாமல் போனது. இதையடுத்து இந்த திருத்த மசோதா மீது இன்று பாராளுமன்றத்தில் காரசார விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்