தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காட்டுத் தீயிலிருந்து வீடுகளை பாதுகாக்க மணிக்கு ரூ.1.7 லட்சம் செலவு

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2025      உலகம்
USA 2025-01-12

Source: provided

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் காட்டுத்தீக்கு இரையாகும் வீடுகளைப் பாதுகாக்க, லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.7 லட்சம் வரை செலவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸின் ஹாலிவுட் பகுதியில் முன்னணி திரைப்பட நிறுவனங்கள் மற்றும் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன. ஜனவரி 7-ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸின் பாலிசேட்ஸ் பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது. 7 நாள்களாக பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வனப்பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி வருகின்றனர். கலிபோர்னியா முழுவதும் பல காட்டுத்தீகள் பரவி வருவதால், லாஸ் ஏஞ்சல்ஸின் மில்லியனர்கள் பிரத்யேகமான தனியார் தீயணைப்பு சேவைகளை நாடியுள்ளனர்.

பொது தீயணைப்புத் துறைகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால், சில கோடீஸ்வரர்கள் ஒரு மணி நேரத்திற்கு 2,000 டாலர்கள் (சுமார் ரூ.1.7 லட்சம்) செலுத்தி தனியார் நிறுவனங்கள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.  இந்தத் தனியார் தீயணைப்பு வீரர்கள் மழைத் துளி விழுவதுபோல செயற்கையான ஸ்பிரிங்லர்களை அமைத்து தண்ணீரை செலுத்தி வீடுகளைத் தீப்பிடிக்காத வண்ணம் பாதுகாப்பார்கள். இந்த நிறுவனங்கள் தீத்தடுப்பு மருந்துகளை வீடுகள் மீது தெளித்தும், மரங்களை தீப்பிடிக்காத வகையில் பாதுகாக்கும் ஜெல் சேவைகளையும் வழங்குகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத் தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். தீயில் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும் காட்டுத்தீயில் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத்தீயினால் 135 பில்லியன் முதல் 150 பில்லியன் டாலர் வரை சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து