முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 மாதங்களாக நீடித்த போர் முடிவுக்கு வருகிறது: இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்புதல்

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      உலகம்
Israel 2024-12-29

டெல் அவிவ், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 15 மாதங்களாக நீடித்த போர் முடிவுக்கு வருகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டெனால்டு டிரம்ப், வருகிற 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். தான் பதவி ஏற்று இரு வாரங்களுக்குள் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனில் மிக மோசமான விளைவுகளை ஹமாஸ் படையினர் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 இந்த நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 15 மாதங்களாக நடைபெற்று வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.  

எனினும் இஸ்ரேல் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையிலான மந்திரி சபை ஒப்புதல் வழங்கினால்தான் இது அமலுக்கு வரும். எனினும் இது வருகிற நாட்களில் நடந்துவிடும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து