முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.41 ஆயிரம் கோடி உதவித்தொகை ஜனாதிபதி திரௌபதி முர்மு பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2025      இந்தியா
Murmu 2023 04 18

Source: provided

புதுடில்லி: விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 41,000 கோடி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி  திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி  உரையுடன் நேற்று (ஜன. 31) தொடங்கியது. பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி  திரௌபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி , நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை நினைவுகூர்ந்தார். பின்னர் மக்களவையில் பேசிய அவர்,

நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் ஆனதை இரண்டு மாதங்களுக்கு முன் கொண்டாடினோம். சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம். அனைத்து இந்தியர்களின் சார்பாக, அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்புக் குழுவில் உள்ள அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.

பழங்குடி சமூகத்தின் 5 கோடி மக்களுக்காக பழங்குடியினர் கிராம மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2.25 கோடி சொத்துரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 41,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.  

மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா மூலமாக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மத்திய அரசின் மருந்தகங்கள் மூலமாக 80 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

இன்று நமது இளைஞர்கள் நிறுவனங்கள் முதல் விளையாட்டு, விண்வெளித் துறை வரை அனைத்துத் துறைகளிலும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகிற்கு வழி காட்டுகிறது. இன்று பெண்கள் அதிக எண்ணிக்கையில் போர் விமானங்களை இயக்குவது, காவல்துறையில் சேருவது மற்றும் நாட்டில் உள்ள நிறுவனங்களை வழிநடத்துவது பாராளுமன்றத்திற்கு மிகவும் பெருமை சேர்க்கும் விஷயம்.

நமது மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று நாட்டை பெருமைப்படுத்துகிறார்கள். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சைபர் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,  உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டம் நிறைவடைந்துள்ளது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயில் பாதை மூலம் இணைக்கப்படும் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து