எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: புதிய வருமான வரி விதிப்பு முறையின்படி வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக அதிகரித்து தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறித்துள்ளார். இதன் மூலம் இனி ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்களவையில் நேற்று (பிப்.1) காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுபோல் வருமான வரி உச்ச வரம்பில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். இது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நடந்து வரும் 3-வது ஆட்சியில் முழு அளவிலான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்து பேசினார். வரி குறைப்புக்கான நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான தேவை ஆகியவற்றை சமஅளவில் உள்ளடக்கிய பட்ஜெட்டாக இது பார்க்கப்படுகிறது.
2026-ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3-6.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையானது நிலம், தொழில் ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மற்றும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்காக விதிகளில் தளர்வு ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும். வருமான வரி தாக்கல் செய்யப்படுதல் எளிதாக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரை வரி பிடித்தம் கிடையாது. தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள் நடுத்தர வர்க்கத்தினர் நலனை சார்ந்ததாக இருக்கும். வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் பிடித்தத்துக்கான வருடாந்திர வரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.
இந்நிலையில், பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, மாத சம்பளம் பெறும் நபர்கள் அதிகம் எதிர்பார்த்த வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் பற்றிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு வருவாய் ரூ.12 லட்சம் பெறுபவர்களுக்கு வருமான வரி இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் இனி வரி செலுத்த தேவை இருக்காது. 2023-ம் ஆண்டில் வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சம் என்ற அளவில் உயர்த்தப்பட்டு இருந்தது. இந்த உச்ச வரம்பு ரூ.12 லட்சம் என்ற அளவில் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. 1 மணிநேரம் 15 நிமிடங்கள் வரை நிதி அமைச்சர் உரையாற்றினார். இதனை தொடர்ந்து பாராளுமன்றம் பிப்ரவரி 3-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வருமாறு:- புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்.
2) வருமான வரி தாக்கல் செய்யப்படுதல் எளிதாக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரை வரி பிடித்தம் கிடையாது.
4) தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள் நடுத்தர வர்க்கத்தினர் நலனை சார்ந்ததாக இருக்கும். வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் (TDS) பிடித்தத்துக்கான வருடாந்திர வரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது. புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதே வேளையில் உயிர்காக்கும் 6 மருந்துகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்கவரியில் இருந்து முழுமையான விலக்கு. பின்னலாடைகளுக்கு இறக்குமதி வரியில் சலுகை. தோல் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க தோல் இறக்குமதிக்கு வரிச் சலுகை. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை நீட்டிக்கப்படுகிறது. ஐஐடி, ஐஐஎஸ்சி உயர் கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக 10 ஆயிரம் ஃபெலோஷிப்கள் வழங்கப்படும். வேளாண் துறைக்கான அறிவிப்புகள்: வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பருப்பு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும். பருத்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். பிகாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும் கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகள் குறுகிய கால கடன்பெற நடவடிக்கை எடுக்கப்படும். கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற 6 ஆண்டு கால சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். பிகாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் அமைக்கப்படும். தொழில்முனைவோருக்கு சிறப்பு அறிவிப்பு: பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு, புதிதாக தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி வழங்கப்படும். காலணி மற்றும் தோல் துறையைப் பொருத்தவரையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பொம்மை உற்பத்தித் துறையில் இந்தியாவை அந்தச் சந்தைக்கான சர்வதேச மையமாக்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். நாடு முழுவதும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் கூடுதல் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் 10,000 சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.
ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலங்களில் புதிதாக 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும். செயற்கை நுண்ணறிவை கல்வியில் ஊக்குவிக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீட்டில் ஒரு மையம் உருவாக்கப்படும்.அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் ‘அடல் ஆய்வகங்கள்’ அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்படும். 5 தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். காப்பீட்டுத் துறைகளுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
இந்தியாவின் குணமாகுங்கள்’ ஹீல் இன் இந்தியா பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். பொருள் விநியோகம் செய்யும் டெலிவரி பணியில் உள்ள ஊழியர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்கப்படும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அடுத்த மூன்றாண்டுகளில் புற்றுநோயாளிகளைப் பராமரிக்கும் வகையில் ’டே-கேர் கேன்சர் மையங்கள்’ அமைக்கப்படும். இவற்றில் 200 மையங்களில் 2025 - 26 ஆண்டிலேயே அமைக்கப்படும்.இவ்வாறாக நிதியமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து பட்ஜெட் உரை முடிந்த நிலையில் பிப்.3-ம் தேதிக்கு பாராளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
உச்ச வரம்புக்கு மேலான வரிகள் விவரம்:
1) ரூ.4 லட்சம் வரை - வரி இல்லை.
2) ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5% வரி.
3) ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10% வரி.
4) ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை - 15% வரி.
5) ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை - 20% வரி.
6) ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை - 25% வரி.
7) ரூ.24 லட்சத்துக்கு மேல் 30% வரி.
எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி?
1) பாதுகாப்புத்துறை – ரூ.4.91 லட்சம் கோடி.
2) ஊரக வளர்ச்சித்துறை – ரூ.2.66 லட்சம் கோடி.
3) உள்துறை – ரூ.2.33 லட்சம் கோடி.
4) விவசாயம் – ரூ.1.17 லட்சம் கோடி.
5) கல்வி – ரூ.1.28 லட்சம் கோடி.
6) மருத்துவம் – ரூ.98,311 கோடி.
7) நகர்ப்புற வளர்ச்சி – ரூ.96,777 கோடி
8)தகவல் தொழில்நுட்பம் – ரூ.95,298 கோடி.
9) ஆற்றல் – ரூ.81,174 கோடி.
10) வர்த்தகம் – ரூ.65,553 கோடி.
11) சமூக நலன் – ரூ.60,052 கோடி.
12) அறிவியல் சார்ந்த துறைகள் – ரூ.55,679 கோடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 4 days ago |
-
ஜூனியர் மகளிர் டி-20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்
31 Jan 2025கோலாலம்பூர் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
இந்தியா- இங்கி.,...
-
2 தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் உயர்வு
31 Jan 2025சென்னை : தனியார் நிறுவனங்களின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
-
களத்திற்கு செல்ல யாரும் தயங்கக்கூடாது: கட்சியினருக்கு விஜய் அறிவுரை
31 Jan 2025சென்னை : களத்திற்கு கட்சி நிர்வாகிகள் செல்ல தயங்கக்கூடாது,'' என்று த.வெ.க., தலைவர் விஜய் கூறி உள்ளார்.
-
த.வெ.க.வின் 3-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு
31 Jan 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு உள்துறை செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் நேரில் ஆஜர்
31 Jan 2025சென்னை : தமிழக உள்துறை செயலாளர், கண்டிப்பாக ஆஜராக வேண்டும்; இல்லையெனில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும்' என்று கோர்ட் கண்டிப்பை தொடர்ந்து, நேற்று மாலை உள்துறை செயலா
-
ஜனாதிபதி குறித்த கருத்து: சோனியாவுக்கு பிரதமர் கண்டனம்
31 Jan 2025புதுடில்லி : ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் பேசியது, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிப்பதற்கு சமம் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து மம்தா குல்கர்னி நீக்கம்
31 Jan 2025பிரயாக்ராஜ் : துறவறம் பூண்ட பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னியை, மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்குவதாக, கின்னர் அகாரா அமைப்பின் நிறுவனர் ரிஷி அஜய் தாஸ் அறிவித்துள்ளா
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்க விழா கிடையாது : பாக். கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
31 Jan 2025லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தொடக்க விழா கிடையாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளன.
-
ஜனாதிபதி உரையால் மக்களுக்கு சோர்வா? - சோனியா விமர்சனத்துக்கு ராஷ்டிரபதி பவன் விளக்கம்
31 Jan 2025புதுடெல்லி : ஜனாதிபதி எந்த நிலையிலும் சோர்வு அடையவில்லை.
-
சச்சின் டெண்டுல்கருக்கு பி.சி.சி.ஐ.-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது
31 Jan 2025மும்பை : இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பி.சி.சி.ஐ.-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
-
மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து மம்தா குல்கர்னி நீக்கம்
31 Jan 2025பிரயாக்ராஜ் : துறவறம் பூண்ட பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னியை, மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்குவதாக, கின்னர் அகாரா அமைப்பின் நிறுவனர் ரிஷி அஜய் தாஸ் அறிவித்துள்ளா
-
கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இல்லை: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 7 எம்.எல்.ஏ.,க்கள் விலகல்
31 Jan 2025புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மியிலிருந்து 7 எம்.எல்.ஏ.க்கள் விலகினர்.
-
திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு
31 Jan 2025சென்னை : வி.சி.க. தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜுனா நேற்று சந்தித்து பேசினார்.
-
காலே டெஸ்ட் நிறுத்தம்
31 Jan 2025வார்னே -முரளிதரன் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி ஜன.29ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸி. அணி 654/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
-
ரஞ்சி கோப்பை தொடர்: கோலி 6 ரன்களில் அவுட் : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்
31 Jan 2025புதுடெல்லி : ரஞ்சி கோப்பை தொடரில் உள்ளூர் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு களமிறங்கிய விராட் கோலி 6 ரன்களில் கிளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார்.
-
2024 லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ.க. ரூ. 1,737 கோடி செலவு
31 Jan 2025புதுடில்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் தேசிய கட்சியான பா.ஜ., ரூ.1,737 கோடி செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்து
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-02-2025.
01 Feb 2025 -
ஒரேநாளில் 2-வது முறை அதிகரித்த தங்கம் விலை சவரன் ரூ.62 ஆயிரத்தை கடந்தது
01 Feb 2025புதுடெல்லி: மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனையானது.
-
மணல் குவாரிகளை திறக்க அ.தி.மு.க. அனுமதிக்காது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
01 Feb 2025சென்னை : தமிழக அரசு 13 மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்கமாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
01 Feb 2025சென்னை : தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு அமல் : வெள்ளை மாளிகை தகவல்
01 Feb 2025வாஷிங்டன் : கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கான 25 சதவீதம் வரி விதிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
-
தமிழர்களின் நிலம் திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பு : அதிபர் திசநாயகா உறுதி
01 Feb 2025கொழும்பு : இலங்கை ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் திசநாயகா உறுதி அளித்துள்ளார்.
-
மத்திய பட்ஜெட் 2025-ல் விலை உயரும், விலை குறையும் பொருட்கள்?
01 Feb 2025புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2025-ல் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் காரணமாக சில பொருள்களின் விலை குறைகின்றன.
-
ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிப்பு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2025புதுடெல்லி: ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது
01 Feb 2025புதுடெல்லி : வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்து விறப்னை செய்யப்பட்டது.