முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் முன்னிலையில் இணைந்தனர்: ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு த.வெ.க.வில் முக்கிய பொறுப்பு

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2025      தமிழகம்
Adav-Arjuna 2024-12-11

Source: provided

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்தார். மேலும், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமாரும் த.வெ.க. வில் இணைந்துள்ளார்.

சென்னை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று பகல் 12 மணியளவில் ஆதவ் அர்ஜுனாவும் நிர்மல் குமாரும் வருகை தந்தனர். இதனைத் தொடர்ந்து, த.வெ.க.  தலைவர் விஜய் முன்னிலையில் இவர்கள் இருவரும் அக்கட்சியின் இணைந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவில் முக்கிய பொறுப்பும், நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்ப அணியில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்த ஆதவ் அர்ஜுனா த.வெ.க. வில் இணைவது குறித்து அக்கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், த.வெ.க.  தலைவர் விஜய்யை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் நேரில் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்திய பிறகு நேற்று அக்கட்சியில் இணைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து