முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட் 2025-ல் விலை உயரும், விலை குறையும் பொருட்கள்?

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2025-ல் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் காரணமாக சில பொருள்களின் விலை குறைகின்றன. அதேபோல் வரி விலக்கு ரத்து மற்றும் புதிய வரி விதிப்புகள் காரணமாக சில பொருள்களின் விலை அதிகரிக்கவுள்ளன.

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார். மொபைல் போன்கள், சார்ஜர்கள், மற்றும் சில புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட பொருள்களுக்கும் வரி சலுகையை அறிவித்துள்ளார். அதேபோல், தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்க வரி 6 சதவீதமும், பிளாட்டினம் மீதான வரி 6.4 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. ஃபெர்ரோனிகெல் மற்றும் பிலிஸ்டர் காப்பருக்கான அடிப்படை சுங்க வரியை நீக்குவதற்கும் நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

விலை குறையும் பொருள்கள்:

1) புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகள்: 36 உயிர் காக்கும் மருந்துகளுக்கான அடிப்படை சுங்க வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

2) மின்னணு பொருள்கள்: செல்போன்கள் மற்றும் அதைச் சார்ந்த பிற பொருள்களுக்கான அடிப்படை சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

3) கோபால்ட் பவுடர் மற்றும் கழிவு, லித்தியம் அயன் பேட்டரி கழிவுகள், ஈயம், துத்தநாகம் போன்ற 12 முக்கியமான தாது பொருள்களுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

4) மின்சார வாகனங்கள்: விலக்கு அளிக்கப்பட்டுள்ள மூலதனப் பொருள்களில், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்புக்கான 35 கூடுதல் பொருள்களும், மொபைல் போன் பேட்டரி தயாரிப்புக்கான 12 கூடுதல் பொருள்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

5) தோல் ஜாக்கெட், ஷூக்கள், பெல்ட், பர்ஸ்கள் விலை குறைகின்றன.

6) உறைந்த மீன் பேஸ்ட் (சுரிமி): உறைந்த மீன் பேஸ்ட் (சுரிமி) தயாரிப்புக்கான உற்பத்தி மற்றும் அதன் மூலப்பொருள் ஏற்றுமதிக்கான சுங்க வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

விலை அதிகரிக்கும் பொருள்கள்:

1) ஃபிளாட் பேனல் டிஸ்ப்ளேக்களுக்கான அடிப்படை சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொலைக்காட்சி மற்றும் மொபைபோன்கள் விலையை பாதிக்கும்.

2) சமூக நல கூடுதல் கட்டணங்கள்: செஸ் வரியின் கீழ் இருந்த 82 கட்டண வரிகளுக்கான விலக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

விலை குறையும் பொருட்கள்:

1) 37 க்கும் அதிகமான மருந்துகள்.

2) எல்.இ.டி,/எல்.சி.டி டிவிக்கள்.

3) பதப்படுத்தப்பட்ட மீன்கள்.

4) லெதர் ஷூக்கள், லெதர் ஜாக்கெட்டுகள்.

5) கடல் பொருட்கள்

6) லித்தியம்-அயன் பேட்டரி.

விலை கூடும் பொருட்கள்

1) ஸ்மார்ட் டிவிக்கள்

2) போன்களுக்கான பேனல்கள்.

3) தொலைக்காட்சி - செல்போன்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து