முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரேநாளில் 2-வது முறை அதிகரித்த தங்கம் விலை சவரன் ரூ.62 ஆயிரத்தை கடந்தது

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனையானது. 

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த ஜன. 22 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.60,000-யைக் கடந்து புதிய உச்சம் தொட்டது. அதன்பிறகும் ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை, நேற்று ஒரு சவரன் ரூ. 62,000-யைக் கடந்துள்ளது.  சென்னையில் நேற்று (பிப். 1) காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 61,960-க்கு விற்பனையானது. 

தொடர்ந்து 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதையடுத்து நேற்று மாலை தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து விற்பனையானது. சென்னையில் ஒரு சவரனுக்கு அதிரடியாக ரூ. 360 உயர்ந்து ரூ.62,320-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ. 7,790-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.ஒரு கிராம் ரூ. 107-க்கும், ஒரு கிலோ ரூ. 1,07,000-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து