முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட் உரையின் போது நிர்மலா அணிந்திருந்த மதுபானி சேலை யார் அந்த துலாரி தேவி?

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      இந்தியா
Nirmala-Seetharaman 2023-04-06

Source: provided

புதுடெல்லி: பீஹாரின் சுயாதீன மதுபானி கலைஞரான துலாரி தேவிக்கும், அந்தக் கலைக்கும் மரியாதை செய்யும் விதமாக நேற்று (சனிக்கிழமை) பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் உடுத்தி வந்த சேலை வழக்கம் போல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாட்டின் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட்டாகும். ஒவ்வொரு பட்ஜெட்டை தாக்கலைப் போலவே அவர் அணிந்திருக்கும் சேலையும் எதிர்பார்ப்பைகளை உருவாக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் ஜவுளி பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய கைவினைக் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக அந்தச் சேலைகள் இருக்கும். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல.

இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது நுணுக்கமான தங்க இழை வேலைப்பாடுகள், ஓவியங்களுடன் கூடிய வெள்ளை நிறச் சேலையும், சிவப்பு நிற ரவிக்கையும் அணிந்திருந்தார். அத்துடன் அவரது ட்ரேட் மார்க்கான ‘பாஹி கட்டா’ சால்வையும், இந்திய அரசு முத்திரையுடன் கூடிய வெல்வெட் பையில் பட்ஜெட் உரை அடங்கிய டேப்லேட்டும் கையில் வைத்திருந்தார். நிதியமைச்சர் அணிந்து வந்திருந்த சேலை வெறும் ஆடை என்பதைக் கடந்து அதற்கு பின்னால் ஒரு சுவார்ஸ்யமான நெகிழ்ச்சியான கதை ஒன்று உள்ளது.

நேற்று நிர்மலா சீதாராமன் அணிந்திருக்கும் சேலை, பீஹாரின் சுயாதீன மதுபானிக் கலைஞரான, பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவி பரிசாக வழங்கியது. பீஹாரின் மதுபானியில் உள்ள மிதிலா கலை நிறுவனத்துக்கு ஒரு கடன் வழங்கும் நிகழ்ச்சிக்காக நிதியமைச்சர் சென்றபோது அவர் துலாரி தேவியைச் சந்தித்தார். அப்போது துலாரி தேவி, நிதியமைச்சருக்கு இந்தச் சேலையை பரிசாக அளித்து, பட்ஜெட் தாக்கலின்போது அதனை அணியுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மதுபானி கலை மற்றும் துலாரி தேவியின் தனித்துவமான திறமைக்கு மரியாதை செய்யும் விதமாகவும், துலாரியின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாகவும் இன்றைய பட்ஜெட் தாக்கலின்போது பரிசளிக்கப்பட்ட அந்தச் சேலையை அணிந்து வந்தார்.

புகழ்பெற்ற மதுபானி கலைஞராக மாறிய துலாரி தேவியின் பயணம் அனைவருக்கும் உத்வேகமளிக்கும் கதையாகும். துலாரி தேவி, ஓவிய பாரம்பரியம் இல்லாத மீனவ சமூக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் பிரபலமான மதுபானி கலைஞரான கற்பூரி தேவியிடம் பணிபுரிந்த போது, அந்த கலை மீதான ஆர்வம் அவரைத் தொற்றிக்கொண்டது.

16 வயதில் கணவனால் கைவிடப்பட்டது, குழந்தையை இழந்தது, 16 வருடங்கள் வீட்டு வேலையாளாக பணியாற்றியது என்ற எந்த துன்பமும் துலாரி தேவியை சோர்வடையச் செய்யவில்லை. துலாரியின் ஓவியங்கள் குழந்தை திருமணம், எய்ட்ஸ், பெண் சிசுகொலை போன்ற முக்கியமான சமூகப் பீரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புகின்றன. துலாரி 10,000 ஓவியங்களை உருவாக்கியுள்ளார். நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் அவற்றை காட்சிப்படுத்தியுள்ளார்.

மேலும், மதிலா கலை நிறுவனம் மற்றும் சேவா மிதிலா சன்ஸ்தான் போன்ற அமைப்புகள் மூலம் 1,000-க்கும் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து இந்தப் பாரம்பரிய கலை வடிவம் எதிர்காலத்திலும் செழித்து வருவதை துலாரி உறுதி செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து