முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் அமைகிறது: தமிழகத்தில் 963 கி.மீ. நீள 4 வழிச்சாலைகள்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      தமிழகம்
NH

Source: provided

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் 963 கி.மீ. நீளமுள்ள 4 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளதாவது: - தமிழகத்தில் தற்போது 2,735 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகளின் அளவு விரைவில் 3,698 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு அதிகரிக்கப்படும். அதுபோல சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72ல் இருந்து 90 ஆக உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் 963 கி.மீ. நீளமுள்ள 4 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவு பெறும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது, 767 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி நிறைவு செய்யும் நிலையில் இருப்பதாகவும், அடுத்த ஆண்டுக்குள் இவை திறக்கப்பட்டுவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 18 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 90 ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் உள்ள 72 சுங்கச் சாவடிகள் மூலம், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ரூ.26,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆறு நான்கு-வழிச் சாலைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்னும் ஓராண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், விக்ரவாண்டி - தஞ்சை, மாமல்லபுரம் - புதுச்சேரி கிழக்கு, நாகை - தஞ்சை, திண்டுக்கல் - பொள்ளாச்சி, விழுப்புரம் - நாகை, குடிபலா - ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஆறு நான்கு-வழிச் சாலைகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து