முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்பின் புதிய உத்தரவால் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த ஈரான் கரன்சி மதிப்பு

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      உலகம்
Iran 2024-07-06

Source: provided

தெஹ்ரான் : அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சி வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஈரானுக்கு எதிராக அதிகபட்ச பொருளாதார அழுத்தம் என்ற கடுமையான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கான நிர்வாக உத்தரவுகளில் நேற்றுமுன்தினம் கையெழுத்திட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தவும், ஈரான் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளை மீண்டும் தொடரவும் இந்த உத்தரவில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், ஈரான் மீதான தடைகளை விதிக்க விரும்பவில்லை என்றும் ஈரானுடன் ஒப்பந்தத்தை எட்ட விரும்புவதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். டிரம்பின் புதிய உத்தரவைத் தொடர்ந்து ஈரானின் கரன்சி மதிப்பானது வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது, அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியால் 8,50,000 ஆக சரிந்தது. முன்னதாக, வெளிநாட்டு உதவிக்கான செலவினங்களை முடக்குவது, சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தை மறுசீரமைப்பது அல்லது அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளுக்கு, ஈரானிய அரசு ஊடகத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து