முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 பணியாளர்கள் தற்காலிக நீக்கம்: சாம்சங் தொழிற்சாலையில் உள்ளியிருப்பு போராட்டம்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      தமிழகம்
CPIM 2024-07-14

Source: provided

காஞ்சிபுரம் : சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவியது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் இந்தியா தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மூன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றிய வருகின்றனர்.

இங்கு பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு இறுதியில் 1,500-க்கும் அதிகமான தொழிலாளா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். 36 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

இதையடுத்து ஒரு மாதத்திற்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் நிறுவன தொழிலாளர்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, கடந்த அக்டோபர் 17-ம் தேதி மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

இந்த நிலையில் தொழிற்சங்கத்தை பதிவு செய்யாத தொழிலாளர் நலத்துறையை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான மோகன்ராஜ் சிவனேசன் குணசேகரன் மூன்று பேரை சாம்சங் நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது. அனைத்து தொடர்ந்து தற்போது சிஐடியு தொழிற்சங்கத்தில் உள்ள சாம்சங் தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது சாம்சங் நிறுவனத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து