முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      விளையாட்டு
South-Africa 2023-12-24

Source: provided

பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பிப்.8ஆம் தேதி தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் அதிகமாக வெற்றி பெறும் இரண்டு அணிகள் பிப்.14ஆம் தேதி இறுதிப் போட்டியில் விளையாடும். இந்தப் போட்டிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக நடத்தப்படுகிறது. 6 அறிமுக வீரர்களுடன் தென்னாப்பிரிக்க அணியில் ஜெரால்டு கோட்ஸி சேர்க்கப்பட்டுள்ளார். டெம்பா பவுமா அணித் தலைவராக செயல்படுகிறார்.

கிளாசன், கேசவ் மஹாராஜ் பிப்.9ஆம் தேதி அணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் எஸ்ஏ 20 பிப்.8ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஈதன் போஷ், மேத்திவ் ப்ரிட்ஜிக், ஜெரால்டு கோட்ஸி, ஜூனியர் டாலா, வியான் முல்தர், மிஹ்லாலி போங்வானா, செனுரன் முத்துசாமி, ஜிடியோன் பீட்டர்ஸ், மீக-ஈல் பிரின்ஸ், ஜேசன் ஸ்மித், கைல் வெர்ரைன். சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் பிப்.19ஆம் தேதி தொடங்குவதும் குறிப்பிடத்தக்கது.

_________________________________________________________________________________

சென்னை சிங்கம்ஸ் அதிரடி வெற்றி

ஐஎஸ்பிஎல் தொடரின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் ஃபால்கன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை சிங்கம்ஸ். தெருவோர சிறுவா்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் டி10 ஓவா்கள் அடிப்படையில் ஐஎஸ்பிஎல் லீக் தொடா் தானே கொண்டாஜி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 6 நகர அணிகள் பங்கேற்றுள்ளன.

செவ்வாய்க்கிழமை சென்னை-ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 10 ஓவா்களில் 64/9 ரன்களை எடுத்தது. அந்த அணியில் சா்க்காா் 18, கிஸான் 10, விஸ்வஜித் 11 ரன்களை எடுத்தனா். சென்னை தரப்பில் முகமது ஜீஷன் 3-13 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். பின்னா் ஆடிய சென்னை அணி 2.5 ஓவா்கள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க பேட்டா் கேதன் மட்ரே 12 பந்துகளில் 35 ரன்களை விளாசினாா். மற்றொரு தொடக்க பேட்டா் ஜகந்நாத் சா்க்காா் 23 ரன்களையும் எடுத்தனா்.

_________________________________________________________________________________

குஜராத் அணி கேப்டன் தேர்வு

டபிள்யூபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டனாக ஆஸி. வீராங்கனை ஆஷ்லி கார்ட்னர் தேர்வாகியுள்ளார். 27 வயதாகும் ஆஷ்லி கார்ட்னர் ஆஸி. ஆல்-ரவுண்டராக இருக்கிறார். இதற்கு முன்பு ஆஸி.யின் பெத் மூனி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தவிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டபிள்யூபிஎல் தொடர் 2023 முதல் நடைபெற்று வருகிறது. முதல் கோப்பையை மும்பையும் 2ஆவது ஆண்டு கோப்பையை ஆர்சிபி அணியும் வென்றது.

ஆடவர் ஐபிஎல் தொடரில் 17 வருடமாக ஆர்சிபி கோப்பையை வெல்லாதது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு டபிள்யூபிஎல் போட்டிகள் பிப்.14ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. முதல் போட்டியில் ஆர்சிபியுடன் குஜராத் அணி சின்னசாமி திடலில் மோதுகின்றன. கடந்த 2 முறையும் குஜராத் அணி 5ஆவது இடத்தைப் பிடித்தது. ஆஷ்லி கார்ட்னர் 2017இல் அறிமுகமானார். 95 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1,400 ரன்கள் 78 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து