முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா - இஸ்ரேல் விலகல்

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      உலகம்
UNO-2023 04 06

வாஷிங்டன், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகும் என ஏற்கனவே டிரம்ப் அறிவித்து இருந்த நிலையில் தற்போது அதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவர், சமீபத்தில் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக இறக்குமதி வரியை விதித்து வருகிறார்.

அதேபோல ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், இந்த அறிவிப்பை நிறைவேற்றும் விதமாக விலகுவதற்கான அரசாணையை டிரம்ப் பிறப்பித்துள்ளார். இதன் மூலம், ஐ.நா. அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது முழுமையாக நிறுத்தப்படுகிறது

இது குறித்து அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:. இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு புதிதாக போர்கள் தொடங்குவதைத் தடுப்பதற்கும் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டவும் ஐ.நா.வுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. ஆனால் அந்த அமைப்பில் சில துணை அமைப்புகள் இந்த அடிப்படை நோக்கத்திலிருந்து தடம் மாறி அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து விலகும் ஜனாதிபதி டிரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து கொள்கிறது. மேலும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில்  இஸ்ரேல் பங்கேற்காது  என்று அதில் இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி பதிவிட்டிருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து