முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள ஆய்வுக்காக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      தமிழகம்
CM-2-2025-02-06

நெல்லை, நெல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு சென்ற நிலையில் அங்கு அவருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பல்வேறு மாவட்டங்களில் களஆய்வுப் பயணம் மேற்கொண்டு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் 2 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்நிலையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று நெல்லை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கே.டி.சி. நகர் பகுதியில் நடந்து சென்று மக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

இதனைத்தொடர்ந்து கங்கைகொண்டான் சிப்காட் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.4,400 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்தார். விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவையும் திறந்து வைத்தார்.

இதனையடுத்து நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகைக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாலை 5 மணியளவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.40 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை மகாத்மா காந்தி தினசரி சந்தை, காய்கனி சந்தை மற்றும் புதிய வணிக வளாகத்தை திறந்து வைத்தார். அங்கு வைத்து காணொலி காட்சி வாயிலாக, நெல்லை டவுன் பாரதியார் பள்ளிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கம், நயினார்குளம் தெற்கு பகுதியில் மேம்படுத்தப்பட்ட பணிகளை திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து