முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் வரி வசூலை அதிகரிக்க புதிய திட்டம்

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      தமிழகம்
Chennai 2023 04 25

Source: provided

சென்னை: சென்னை மாநகராட்சியில் நீண்ட காலமாக வரி செலுத்தாமல் உள்ள இரண்டு லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும் அப்படி நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி விளங்கி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் சொந்தமாக வீடு மற்றும் நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து மாநகராட்சி வரி வசூல் செய்து வருகிறது. இந்த வரி மூலம் தான் மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து பகுதிகளிலும் சுகாதாரப் பணிகள் அடிப்படை வசதிகள் பூங்காக்கள் பராமரிப்பு தெரு விளக்குகள் அமைத்தல் திடக்கழிவுகளை அகற்றுதல் சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சியில் ஆண்டுக்கு 1,700 கோடி வரை சொத்து வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் ஆண்டுதோறும் சென்னையில் இருக்கும் சொத்து உரிமையாளர்கள் வருகிற ஏப்ரல் 30-ம் தேதிக்குள் முதல் அரையாண்டுருக்கான வரியும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் அடுத்த அரையாண்டுருக்கான வரியையும் செலுத்தியிருக்க வேண்டும். மேலும் சரியான நேரத்தில் சொத்து வரி கட்டுபவர்களுக்கு 5 ஆயிரம் வரை வரியில் தள்ளுபடி அளிக்கப்படும் என அறிவித்தது. மேலும் இது முறையாக வரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகையாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டிற்கான சொத்துவரி வசூல் நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. இந்த நிலையில் மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களால் பல்வேறு பணிகள் மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வார்டு வாரியாக ஆய்வு நடத்தி வரி செலுத்தாத கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில பகுதிகளில் கடைகளுக்கு சீல் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சியில் முதல் முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி முறையாக சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு க்யூஆர் குறியீட்டுடன் அடங்கிய நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 5 ஆயிரத்திற்கும் மேல் சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இந்த குறியீட்டை பயன்படுத்தி எளிதாக சொத்து வரியை செலுத்த முடியும் எனவும் மேலும் நீண்ட நாட்களாக வரி செலுத்தாமல் உள்ள சுமார் இரண்டு லட்சம் வணிக கட்டிடங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாமல் இப்பவர்களுக்கு அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து