முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதியுடன் சச்சின் சந்திப்பு

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      இந்தியா
Tendulkar-2025-02-06

புதுடில்லி, முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், குடும்பத்தினருடன் டில்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணிந்து விளையாடிய ஜெர்சியை பரிசாக ஜனாதிபதியிடம் கொடுத்தார்.

தற்போது 51 வயதாகும் சச்சின் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 200 டெஸ்ட் மற்றும் 463 ஒரு நாள் போட்டிகள் அடக்கம். டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்கள், ஒரு நாள் போட்டியில் 18,426 ரன்கள் குவித்து என பல்வேறு சாதனைகளை அவர் படைத்து உள்ளார். இதற்காக அவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பி.சி.சி.ஐ.,யின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார்.

இந்நிலையில், நேற்று  அவர் ஜனாதிபதி மாளிகை சென்றார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த சச்சின் டெண்டுல்கர் அவருடன் கலந்துரையாடினார். தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் அணிந்து விளையாடிய ஜெர்சியில் கையெழுத்து போட்டு, அதனை பரிசாக முர்முவிடம் அளித்தார். அப்போது, சச்சின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து