முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைப்பூச தினத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் : தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : தைப்பூச தினத்தன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதால் அரசு பொது விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் சில மங்களகரமான நாட்களில் பொது மக்களால் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்திட அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகின்ற 11.02.2025 (செவ்வாய்கிழமை) தைப்பூசம் நாளில் ஆவண பதிவுகள் மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் அன்றைய தினத்தில் வழக்கம்போல் காலை 10.00 மணி முதல் ஆவண பதிவு முடியும் வரை செயல்படும். விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு பதிவுச் சட்டம் கீழுள்ள இனம் 17(3)-ன் ஏ,பி,சி-ல் கூறப்பட்டவாறு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படவேண்டும்

அன்றைய தினம், ஸ்டார் 2.0 திட்டப்படி அனைத்து அலுவலகங்களிலும் பதிவுப் பணி இணையவழி தடையின்றி நடைபெற ஏதுவாக பொதுமக்களுக்கு முன் பதிவு செய்திடும் வசதி மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்களுக்கான ஹெல்ப் டெஸ்க் மற்றும் உதவி எண் வசதி ஆகியவற்றினை எவ்வித குறைபாட்டுக்கும் இடமின்றி உடன் ஏற்படுத்திட வேண்டும். துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து