முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல்: டெல்லியில் பெண் தாதா கைது

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      இந்தியா
Jail 2024 08 09

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தி பெண் தாதாவை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியை சேர்ந்த பிரபல ரவுடி ஹாஷிம் பாபா. இவர் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல், ஆயுதங்கள்,போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். ஹாஷிம் பாபாவின் 3-வது மனைவி சோயாகான். கணவர் ஹாஷிம் பாபா ஜெயிலுக்கு சென்றதால் அவர் செய்து வந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபட சோயாகான் தொடங்கினார். அடிக்கடி ஜெயிலிலிருக்கும் தனது கணவரை பார்த்து வந்துள்ளார். அப்போது ஹாஷீம் பாபா தனது மனைவியிடம் தனது ஆட்கள் மூலம் எப்படி போதைப்பொருட்கள் கடத்துவது என்பது உள்பட பல ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்படி, கணவரின் கூட்டாளிகளை பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுத்தி ஒருபெண் தாதாவாக சோயாகான் செயல்பட்டு வந்தார். ஆனால் போலீசார் பிடியில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக இவர், நேரடியாக எதையும் செய்யாமல் திரைமறைவில் கணவரின் ஆட்களை இயக்கி வந்துள்ளார். இதன் மூலம் கோடிக்கணக்கான பணமும் கிடைத்தது. இதனால் சோயாகான் ஆடம்பர வாழ்க்கை வாழ தொடங்கினார். விலை உயந்த ஆடை அணிந்து ஆடம்பர காரில் வலம் வந்தார். நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னை பெரிய பெண் தொழில் அதிபர் போல வெளி உலகத்திற்கு காட்டிக்கொண்டார். சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருந்து பல புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள வெல்கம் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சோயாகான் 270 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். சோயாகானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். சோயாகானிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து